கோவையில் சட்டவிரோத மண் எடுப்பு: நீதிபதிகள் நேரில் ஆய்வு

கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்து செங்கல் உற்பத்தி செய்யும் விவகாரம் குறித்து நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பேரூர், மாதம்பட்டி, கரடிமடை பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்து செங்கல் உற்பத்தி செய்யும் விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பேரூர் வட்டம் ஆலந்துறை, காளிமங்கலம், தேவராயபுரம், வால்கரடு மற்றும் மதுக்கரை வட்டம் கரடிமடை ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மண் எடுத்து செங்கல் உற்பத்தி நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



இதையடுத்து, சட்டவிரோதமாக மணல் கடத்தும் நபர்களை உடனடியாக கைது செய்து, இயந்திரங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வாரம் கோவை மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் ஆய்வில், முறைகேடாக மண் எடுப்பதும், செங்கல் தயாரிப்பதும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் 29 அன்று பேரூர், மாதம்பட்டி, கரடிமடை ஆகிய பகுதிகளில் கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி நாராயணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பு நீதிபதி ரமேஷ், மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati, கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் அறிக்கை விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மண் எடுப்பு மற்றும் செங்கல் உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் இந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...