கோவை தெலுங்குபாளையத்தில் நொய்யல் ஆற்றின் கரைகளில் பனை விதைகள் பதிக்கும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

கோவை தெலுங்குபாளையத்தில் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் பனை விதைகள் பதிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப தொடங்கி வைத்தார். இது மண்ணரிப்பைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பேரூர் சாலை தெலுங்குபாளையம் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் பனை விதைகள் பதிக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப இன்று (30.09.2024) துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நீர் பிடிப்பு பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க ஆற்று ஓரங்களிலும், குளங்களின் கரையிலும், வாய்க்கால் கரையிலும் குட்டை உள்ள பகுதிகளான காவிரிக் கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இன்றைய தினம் (30.09.2024) கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பேரூர் சாலை வார்டு எண் 76 தெலுங்கு பாளையம் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் அளவீடு செய்யப்பட்ட இடங்களில் முதற்கட்டமாக சுமார் 1000 பனை விதைகள் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களிலும் பனை விதைகள் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

இந்த பனை விதைகள் கோயம்புத்தூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பனை மேம்பாட்டு இயக்கம் 2024-25 மூலமாக பெறப்பட்டது.

இந்நிகழ்வில் தோட்டக்கலை துணை இயக்குனர் சித்தார்த், உதவி இயக்குநர் நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, மாநகர தலைமைப் பொறியாளர் (பொ) முருகேசன், நகரமைப்பு அலுவலர் குமார், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், உறுப்பினர்கள் ராஜ்குமார், சிவசக்தி, வசந்தாமணி, உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன், தன்னார்வலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...