கோவை கூடலூரில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதை கொண்டாடிய திமுகவினர்

கோவை கூடலூர் வீரபாண்டி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதை முன்னிட்டு திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர செயலாளர் அறிவரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதல்வராக பதவியேற்றதை முன்னிட்டு திமுகவினர் கொண்டாடினர். நகர திமுக சார்பில் நகர செயலாளர் அறிவரசு தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும், செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியின் வீரபாண்டி பிரிவில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், திமுகவினர் பட்டாசுகள் வெடித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், அப்பகுதி மக்கள், பேருந்து பயணிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நகரமன்ற துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், அகில் சந்திரசேகர் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மகளிர் அணியினர், ஐ.டி.விங் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...