கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களிடையே மோதல்: மாணவி உள்பட 5 பேர் கைது

கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், மாணவர்களை கத்தியால் வெட்டிய மாணவி உள்பட 5 பேரை மதுக்கரை போலீஸார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் விடியோ பதிவிடுவது தொடர்பான தகராறு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்தது.


Coimbatore: கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், மாணவர்களை கத்தியால் வெட்டிய மாணவி உள்பட 5 பேரை மதுக்கரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம் பட்டியைச் சேர்ந்த வீரண்ணன் மகன் கிஷோர் (19), கோவை மதுக்கரை பகுதியில் தனது சகோதரி மோனிகாவுடன் வசித்து வந்தார். இவர் திருமலையாம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சனிக்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவின் போது, இன்ஸ்டாகிராமில் விடியோ பதிவிடுவது தொடர்பாக இரண்டாம் ஆண்டு மாணவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டது.

விழா முடிந்த பின், மதுக்கரை பகுதியில் உள்ள உணவகத்தில் கிஷோர் தனது நண்பர்களுடன் இருந்தபோது, இரண்டாம் ஆண்டு மாணவர் அழகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை அழைத்துச் சென்று தாக்கினர். இதில் கிஷோர் மற்றும் அவரது நண்பர் ரோஷன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், கிஷோரின் சகோதரி மோனிகா (21) மற்றும் உறவினர் பிரவீசன் (21) ஆகியோர் கிஷோரைத் தேடி வந்தபோது, இரண்டாம் ஆண்டு மாணவர்களான முகேஷ், நிதீஷ்குமார், சபரிபாலா கண்ணன் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மோனிகா, கீழே கிடந்த கத்தியால் மூவரையும் வெட்டி காயப்படுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டு, மோனிகா, பிரவீசன், முகேஷ், ராஜேஸ்வரன், யுவராஜ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். மேலும், அழகேஸ்வரன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கல்லூரி மாணவர்கள் என்பதால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...