மேட்டுப்பாளையத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் வலசை: சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து

மேட்டுப்பாளையத்தில் பருவமழைக்கு முன் வண்ணத்துப்பூச்சிகள் வலசை தொடங்கியுள்ளன. கல்லார், சிறுமுகை பகுதிகளில் கூட்டம் கூட்டமாக பறக்கும் பூச்சிகள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து வண்ணத்துப்பூச்சிகள் வலசை செல்லத் தொடங்கியுள்ளன. இந்த அழகிய காட்சி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், நீலகிரி மலைத்தொடரின் அடிவாரப் பகுதியாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதியாகவும் விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள மலைத்தொடர்களில் இருந்து உருவாகும் காட்டாறுகள் அனைத்தும் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் கலக்கின்றன.



தற்போது வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே, மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை போன்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மலைக்காலத்தின் துவக்கத்தை அறிவிக்கும் வகையில், நீலகிரி மலைத்தொடர்களில் இருந்து பல்வேறு வண்ணங்களைக் கொண்ட பட்டாம்பூச்சிகள் தங்கள் வலசையைத் தொடங்கியுள்ளன.

மேட்டுப்பாளையம், சிறுமுகை, கல்லார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக வலசை செல்வதைக் காணலாம். இந்த வண்ணத்துப்பூச்சிகள் பவானி ஆறு, கல்லாறு போன்ற நீர்நிலைகளின் கரையோரப் பகுதிகளில் வெள்ளை, கருப்பு, ஊதா போன்ற பல்வேறு வண்ணங்களில் காணப்படுகின்றன.



உதகைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த வண்ணத்துப்பூச்சிகள், வடகிழக்கு பருவமழைக் காலத்தை உணர்ந்து தங்கள் இடப்பெயர்ச்சியைத் தொடங்கியுள்ளன. வலசை செல்லும்போது, இவை தங்கள் பறக்கும் திறனை மேம்படுத்த ஆற்றங்கரைகளில் உள்ள உப்புச் சத்தை உறிஞ்சி, நீண்ட பயணத்திற்கு வலிமை பெறுவதாக பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மேட்டுப்பாளையத்தில் எங்கு பார்த்தாலும் சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சிகள் மக்களின் மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...