பாஜக உறுப்பினர் சேர்க்கை: 72 லட்சம் பேர் இணைந்துள்ளதாக கே.பி.ராமலிங்கம் தகவல்

கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் 72 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.



கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தலைவர் கே.பி.ராமலிங்கம், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.



அப்போது அவர் கூறியதாவது: "செப்டம்பர் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேசியமும் தெய்வீகமும் தான் பாஜகவின் கொள்கை. இந்தக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 72 லட்சம் பேர் உறுப்பினராகச் சேர்ந்துள்ளனர்."

"தொடர்ந்து நேர்மையான ஒரு இயக்கம் பாரதத்தை ஆள வேண்டும். அப்படி நேர்மையாக ஆளும் கட்சியாக பாஜக உள்ளது. அதனால் தான் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்," என்று கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

மேலும் அவர், "மொத்தமாக தமிழக அமைச்சர்கள் என்பது திருடர்கள் கூட்டம். புதிய திருடன் வந்தால் என்ன, பழைய திருடன் வந்தால் என்ன, எல்லாம் திருடன் தான். புரோக்கர் நல்லபடியாக யார் கமிஷன் பெற்று சபரீசன், உதயநிதிக்கு கொடுப்பார்கள் என்பது தான் செந்தில் பாலாஜி. கமிஷன் பெற்று தருவதில் வல்லவர்," என்றும் குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...