கோவை ஆலாந்துறை அருகே வீட்டில் 22 சவரன் நகைகள், ரூ.5.32 லட்சம் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை ஆலாந்துறை அருகே கள்ளிப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.5.32 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை ஆலாந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.5.32 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (27) என்பவர் கடந்த 27 ஆம் தேதி தனது குடும்பத்துடன் அவிநாசியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து வீட்டைப் பார்த்தபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.5.32 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

உடனடியாக இது குறித்து ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், தனது அடையாளத்தை மறைக்க மங்கி கேப் மற்றும் கையுறைகளை அணிந்துகொண்டு ஒரு மர்ம நபர் சாவகாசமாக கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையடித்த மர்ம நபரைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...