கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை

கோவையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக 45 வயதான கண்ணன் பழனிசாமிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு, கோவை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணன் பழனிசாமி (45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், 30.09.2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, குற்றவாளி கண்ணன் பழனிசாமிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிறப்பாக விசாரித்த புலனாய்வு அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் திறம்பட ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் காவலர் கனிமொழி (WPC 1127) ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...