கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்

கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் ஒரு மாத விழிப்புணர்வு கண்காட்சி துவங்கியது. அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெறும் இந்த கண்காட்சியில் மார்பக புற்றுநோய் பற்றிய முக்கிய தகவல்கள் வழங்கப்படுகின்றன.


Coimbatore: கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு மாத விழிப்புணர்வு கண்காட்சி இன்று காலை துவங்கியது. இந்த கண்காட்சியை கங்கா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் துவக்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான வழிமுறைகள், மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய விரிவான தகவல்கள் வழங்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ஒருமுறை மார்பகப் பரிசோதனை மற்றும் ஆண்டுதோறும் செய்யப்படும் மேமோகிராம் பரிசோதனை குறித்தும் விளக்கப்படுகிறது.



கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய தவறான கருத்துக்களை நீக்கும் வகையில் மருத்துவ ஆலோசகர்கள் தெளிவான விளக்கங்களை அளிக்கின்றனர். மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்பதையும், மார்பகங்களை சீரமைக்கும் முறைகளையும் பற்றி விளக்குகின்றனர்.

கங்கா மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபோலிஸ் உடன் இணைந்து "சக்தி" என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுவரை 89 முகாம்களில் 4505 பெண்கள் பரிசோதிக்கப்பட்டு, 58 பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி அக்டோபர் 31 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கங்கா மருத்துவமனையின் கீழ்தளம், பி பிளாக்கில் நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த கண்காட்சியைப் பார்வையிட்டு பயனடையுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...