உடுமலையில் பொறியாளர் தின விழா: மூன்று பேருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன

உடுமலையில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் சார்பில் பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. மூன்று சிறந்த பொறியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2025ஆம் ஆண்டு கட்டுமான கண்காட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள லெப்டினெனட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் உடுமலை மையத்தின் சார்பாக பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் கையேடு பிரிவு பொறியாளர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், கட்டிடத் துறையில் பொறியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.



விழாவின் முக்கிய நிகழ்வாக மூன்று சிறந்த பொறியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் துணைப் பொறியாளர் செந்தில்குமாருக்கு மனிதநேய பண்பாளர் விருதும், இளமதிக்கு மனிதநேய வித்தகர் விருதும், செஞ்சூரி கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் பொறியாளர் சுந்தரத்திற்கு பசுமை நேய பண்பாளர் விருதும் வழங்கப்பட்டன.

மேலும், 2025ஆம் ஆண்டு உடுமலையில் நடைபெற உள்ள கட்டுமான கண்காட்சிக்கு "அஸ்திவாரம்" என்று பெயரிடப்பட்டது. இந்த கண்காட்சிக்கான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் செப்டம்பர் மாத வரவு செலவு கணக்குகளும் பார்வையிடப்பட்டன.

இந்நிகழ்வில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் உடுமலை மையத்தின் தலைவர் பாலமுருகன், செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் அருண்குமார், திருப்பூர் மாவட்ட சுற்றுலா துறை சங்க நிர்வாகி எஸ்.எம். நாகராஜ், சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் மற்றும் உடுமலை பகுதி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...