கோவை கிழக்கு மண்டலத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு பட்டா மாறுதல் முகாமை துவக்கி வைத்தார்

கோவை கிழக்கு மண்டலத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி 01.10.2024 அன்று சிறப்பு பட்டா மாறுதல் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பல்வேறு நில ஆவணங்கள் தொடர்பான சேவைகள் வழங்கப்படுகின்றன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.53க்குட்பட்ட மசக்காளிபாளையம், ஹர்ஷா மஹால் திருமண மண்டபத்தில், "மக்களைத்தேடி மாநகராட்சி" சிறப்பு முகாமின் தொடர்ச்சியாக, "சிறப்பு பட்டா மாறுதல்" முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (01.10.2024) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

இம்முகாமில் கூட்டுப்பட்டா, தனிப்பட்டா, நில அளவை செய்தல், பரப்பளவு திருத்தம், TSLR நகல் மற்றும் வரைபட நகல் உள்ளிட்ட அனைத்து வகையான சேவைகள் தொடர்பான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்றன. தகுதியான விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவாக தீர்வுகாணப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



மாவட்ட ஆட்சியர் மேலும் கூறுகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சுமார் 95 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், "முதல்வரின் முகவரி" திட்டத்தின் மூலம் பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீதும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் அமைக்கப்பட்டிருந்த மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கடந்த 26.09.2024 அன்று நடைபெற்ற "மக்களைத்தேடி மாநகராட்சி" சிறப்பு முகாமில் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு பல்வேறு ஆணைகளையும் வழங்கினார்.



இந்நிகழ்வில் துணை ஆணையாளர் க.சிவகுமார், கிழக்கு மண்டல குழுத்தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி இயக்குநர் (நில அளவைத்துறை) சரவணன், உதவி ஆணையர்கள் முத்துச்சாமி(கிழக்கு), துரைமுருகன்(மேற்கு), செயற்பொறியாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் மோகன், நவீன்குமார், கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பல அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...