கோவை மாநகராட்சி பள்ளியில் நேஷனல் இன்சூரன்ஸ் ஊழியர்கள் மேற்கொண்ட தூய்மைப் பணிகள்

கோவை அனுப்பர்பாளையத்தில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நேஷனல் இன்சூரன்ஸ் ஊழியர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். முதுநிலை மண்டல மேலாளர் பாலமுரளி மரக்கன்றுகள் நட்டு, முகவர்களுக்கு வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி பள்ளியில் நேஷனல் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் சார்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வு தூய்மை பாரதம் இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

2014ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அரசால் தொடங்கப்பட்ட தூய்மை பாரதம் இயக்கம், நாட்டில் பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதையும், சுற்றுப்புற பராமரிப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.



இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நேஷனல் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தின் ஊழியர்கள் கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனுப்பர்பாளையம், நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நேஷனல் இன்சூரன்ஸ் காப்பீடு திட்ட நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர் பாலமுரளி, தூய்மைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதனைத் தொடர்ந்து, காப்பீட்டு நிறுவன முகவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...