பி.எஸ்.என்.எல் 25வது ஆண்டு விழா: கோவையில் ஊழியர்கள் பேரணி

கோவை ரேஸ்கோர்ஸில் பி.எஸ்.என்.எல் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பேரணி நடத்தினர். பலூன்கள், பதாகைகளுடன் ஊர்வலமாகச் சென்ற ஊழியர்கள் நிறுவனத்தின் சேவைகளை விளம்பரப்படுத்தினர்.



கோவை: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தின் 25வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பேரணி நடத்தினர்.

அக்டோபர் 1ஆம் தேதி பி.எஸ்.என்.எல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பேரணி நடத்தினர்.



பேரணியில் பங்கேற்ற ஊழியர்கள் கைகளில் பலூன்களையும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைகளை விளக்கும் பதாகைகளையும் ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். இந்த பேரணி மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைகளை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்தனர்.



இந்த நிகழ்வில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் விதமாக நடத்தப்பட்ட இந்த பேரணி, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சியையும், மக்களுக்கான அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...