கோவையில் தட்கல் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காததற்கு எதிர்ப்பு

கோவையில் தட்கல் திட்டத்தில் பதிவு செய்து பல மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் புகார். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து, கோவை டாடாபாத் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளரை சந்தித்தனர். தட்கல் திட்டம் மற்றும் அனைத்து வகை வேளாண் மின் இணைப்பு திட்டங்களிலும் 2 ஆண்டுகளாக காத்திருக்கும் 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோரி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.

விவசாயி அரசேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு மின்சார வாரியம் தட்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தி, விவசாயிகளுக்கு 90 நாட்களில் வேளாண் மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று அறிவித்தது. 5 HP-க்கு 2.5 லட்சம், 7.5 HP-க்கு 2.75 லட்சம், 10 HP-க்கு 3 லட்சம், 15 HP-க்கு 4 லட்சம் என கட்டணம் நிர்ணயித்துள்ளனர். ஆனால், 15 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள் 90 நாட்களில் மின் இணைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர்," என்றார்.

2022 வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், 90 நாட்களில் வேளாண் மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், தற்போது தட்கல் திட்டத்தில் பணம் கட்டிய 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு பெறாமல் காத்திருப்பதாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் உபகரணங்கள் இல்லை என்று கூறி காலம் தாழ்த்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்களிலும், மின்சார வாரியத்திடம் பலமுறை நேரிலும், அஞ்சல் மூலமாகவும் புகார் அளித்தும் இரண்டு ஆண்டுகளாக ஒரு மின் இணைப்பு கூட வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...