சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை: லீமா ரோஸ் மார்ட்டினுக்கு ரோட்டரி சங்கம் கௌரவிப்பு

கோவையில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்வில், சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை வழங்கிய லீமா ரோஸ் மார்ட்டின் செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டார். வயநாடு நிவாரணம், கோவை சிசிடிவி திட்டம் மற்றும் மாணவர் விஞ்ஞான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.


கோவை: கோவையில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்வில், சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை வழங்கிய லீமா ரோஸ் மார்ட்டின் செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு அக்டோபர் 1 அன்று கலைஞர் கருணாநிதி கல்லூரியில் நடைபெற்றது.

லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கிய நன்கொடையில், வயநாடு பேரிடர் நிவாரணத்திற்கு ரூ.2 கோடியும், கோவை 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் சிசிடிவி பொருத்தும் பணிக்கு ரூ.7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 'மிஷன் ரூமி-2024' திட்டத்தின் கீழ் 6000 அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து இந்தியாவின் முதல் மறுபயன்பாடு ஹைபிரிட் ராக்கெட் உருவாக்கத்திற்கு ரூ.4 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.

ரோட்டரி சங்கத்தின் TRF கருத்தரங்கில், "நம்பிக்கையின் மலர்கள்" எனும் தலைப்பில் பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக சேவைகளுக்கு நிதி திரட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மூத்த வழக்கறிஞரும் ரோட்டரி ஆளுநருமான சுந்தர வடிவேலு, வழக்கறிஞர் முருகாம்பாள் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் இணைந்து லீமா ரோஸ் மார்ட்டினுக்கு செங்கோல் வழங்கி கௌரவித்தனர்.

நிகழ்ச்சியில் பிளாட்டினம் சேர் சர்கிள் ரவிசங்கர், இலங்கையைச் சேர்ந்த கௌரி ராஜன், புப்புடு டி சொய்சா, சகுந்தலா ராஹா, ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் (இந்தியா), முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, பி.டி.ஜி. எம். ஜோஸ் சாக்கோ, செல்ல ராகவேந்திரா, பத்மகுமார், ஆர்.ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...