உடுமலையில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உடுமலை வட்டக் கிளை சார்பாக சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. வட்டக்கிளை செயலாளர் வெங்கடுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உடுமலை வட்டக் கிளை சார்பாக நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை செயலாளர் வெங்கடுசாமி தலைமை வகித்தார்.



அனைத்துறை ஓய்வூதிய சங்க வட்ட கிளை தலைவர் தாசன் கண்டன உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நிர்வாகிகள் பேசினார்கள். இந்த நிகழ்வில் சிவக்குமார், பாலசுப்பிரமணியன், அம்சராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிறைவாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் நன்றி உரை கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...