மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

மண் சரிவால் இரண்டு நாட்கள் நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை இன்று (அக்டோபர் 2) மீண்டும் தொடங்கியது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.



கோவை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை இன்று (அக்டோபர் 2) காலை முதல் மீண்டும் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக மண் சரிவு காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கும், நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கும் தினமும் மலை ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இந்த ரயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் இயற்கை எழிலை ரசித்து வருகின்றனர்.



கடந்த செப்டம்பர் 29 அன்று இரவு நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், பர்லியாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டது.



இதனால் ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன, மரங்கள் சாய்ந்தன.

இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று (அக்டோபர் 1) மாலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்தன.

இதனைத் தொடர்ந்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் இன்று (அக்டோபர் 2) முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என அறிவித்தது.



இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காலை முதலே மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.



வழக்கம்போல் காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் மலைப்பகுதியின் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...