காளம்பாளையம் ஊராட்சியில் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்க பூமி பூஜை

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தின் காளம்பாளையம் ஊராட்சி வேலாயுதபுரத்தில் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. மேட்டுப்பாளையம் MLA ஏகே செல்வராஜ் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சங்கீதா பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காளம்பாளையம் ஊராட்சி வேலாயுதபுரத்தில் புதிய மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 8.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த குடிநீர் விஸ்தரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சுமார் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டுமானத்தை துவக்கும் பூமி பூஜை நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இத்திட்டம் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த புதிய மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கப்படுவதன் மூலம் வேலாயுதபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...