திருப்பூரில் 'OPERATION ZERO CRIME' திட்டம் தொடக்கம்: குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முன்முயற்சி

திருப்பூரில் குழந்தைகளை இணையவழி குற்றங்கள், பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கவும், போதைப்பழக்கத்தை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து "OPERATION ZERO CRIME" திட்டத்தை தொடங்கியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் மாநகர காவல்துறையும் இணைந்து "OPERATION ZERO CRIME" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இத்திட்டம் குழந்தைகளை இணையவழி குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதோடு, போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இத்திட்டத் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் கிரிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையர் லட்சுமி, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



மாநகர காவல் ஆணையர் லட்சுமி கூறுகையில், இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுப்பது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குவது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை அடங்கும் என்றார்.

இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் கல்லூரி முதல்வர்கள் கொண்ட ஒரு முக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு ஆலோசனை வழங்க சட்ட ஆலோசகரும், உதவி புரிய தனிப்படை காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று துணைக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் இரண்டு துணைக்குழுக்களின் கீழ் கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு குறிப்பிட்ட பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது துணைக்குழுவின் கீழ் இரண்டு ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் துணைக்குழுவின் கீழ் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இரண்டாவது துணைக்குழுவின் கீழ் உள்ள காவல் உதவி ஆணையர்கள் கல்லூரி மாணவர்களுக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தகுதி வாய்ந்த ஆலோசகர்கள் தேவைப்படும் குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள்.

இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளை இணையவழி குற்றங்கள், பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்தல், போதைப்பழக்கத்தைத் தடுத்தல், உயிரியல் மாற்றத்துடன் வளரும் குழந்தைகளைக் காத்தல், போக்குவரத்து விதிமுறைகள் பற்றிக் கற்பித்தல், பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் போன்ற பல்வேறு நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...