பொள்ளாச்சி அருகே கிராம சபை கூட்டம்: பெண்கள் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி அருகே வடபுதூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பெண்கள் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள வடபுதூர் கிராமத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடபுதூர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது, குழந்தை திருமணத்தைத் தடுப்பது, புகையிலை விற்பனையை முற்றிலும் ஒழிப்பது ஆகியவை அடங்கும். மேலும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் படிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.



கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக் குமார், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், ஒன்றிய செயலாளர் செந்தில், திமுக பொறியாளர் அணி நிர்வாகி அசோக் குமார் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...