கோவை கவுண்டம்பாளையத்தில் ஸ்ரீ ஆதிமங்கல விநாயகர் கோவிலில் 15ஆம் ஆண்டு விழா கோலாகலம்

கோவை கவுண்டம்பாளையம் ஸ்ரீ ஆதிமங்கல விநாயகர் கோவிலில் 15ஆம் ஆண்டு விழா மற்றும் மகாளய அமாவாசை விழா கோலாகலமாக நடைபெற்றது. 51 குடும்பங்கள் பங்கேற்ற சிவ கலச மகா சிவ வேள்வி, திருக்கல்யாணம், திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் சிவா நகர் சிவாலயம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிமங்கல விநாயகர் திருக்கோவிலில் 15 ஆம் ஆண்டு விழா மற்றும் மகாளய அமாவாசை விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 51 குடும்பத்தினர் கலந்து கொண்ட 51 சிவ கலச மகா சிவ வேள்வி நடைபெற்றது.

விழா நேற்று முதல் தேதி இடத்தூய்மை வழிபாட்டுடன் தொடங்கியது. வள்ளி கும்மி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை 5 மணி அளவில் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. அதன் பின்னர் 51 சிவ கலச மகா சிவ வேள்வி நிகழ்ச்சி தொடங்கியது.



வேள்வியில் பங்கேற்ற 51 குடும்பத்தினர் அரிசி, நல்லெண்ணெய், வேள்வி பொருட்கள், பூமாலை, உதிரிப்பூக்கள், நெய், வஸ்திர வகைகள், அபிஷேக பொருட்கள், தேங்காய், பழ வகைகள், எலுமிச்சை பழம், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்த பூஜைகளை பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சின்னவேடம்பட்டி இராமானந்த குமரகுருபர சுவாமிகள், செஞ்சேரிமலை முத்து சிவராம சுவாமி அடிகளார் ஆகியோர் நடத்தி வைத்தனர். பின்னர் அருள்மிகு மங்களநாயகி உடன்மர் மங்களீஸ்வரர் திருமேனிக்கு புனித நீராட்டு விழாவும், தொடர்ந்து ஆதிமங்கள விநாயகர், வீரவரத ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, திருச்சுற்று தெய்வங்களுக்கு புனித நீராட்டு விழாவும் நடைபெற்றது.

அதன் பின்னர் அலங்கார வழிபாடு, ஸ்ரீ மங்களாம்பிகை உடன்மர் மங்கலீஸ்வரர் பெருமான் திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றன. காலை முதல் மாலை வரை அன்னதானம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு, பிரதோஷ வழிபாட்டு குழு, பௌர்ணமி மகளிர் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கவுண்டம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...