1991-ல் அகற்றப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்: ப.சிதம்பரம் விமர்சனம்

கோவையில் நடைபெற்ற ஜவுளித்துறை கலந்துரையாடல் நிகழ்வில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதாரம் உலகளவில் போட்டியிட முடியாது என்று அவர் கூறினார்.



Coimbatore: அகில இந்திய ப்ரொபஷனல் காங்கிரஸ் சார்பில், "India Let's Spin The Chakra Again" என்ற கருப்பொருளுடன் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அகில இந்திய ப்ரொபஷனல் காங்கிரஸ் சேர்மன் பிரவீன் சக்கரவர்த்தி, பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இந்தியா எவ்வாறு ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பது, ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி துறையில் எவ்வாறு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது என்பது குறித்த விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது.



பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ப.சிதம்பரம், "1991 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட கட்டுப்பாடுகள் எல்லாம் தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதாரம், உலகில் போட்டிப் பொருளாதாரமாக வர முடியாது," என்று கூறினார். மேலும், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதியில் போட்டி போட வேண்டும் என்று நினைப்பது பகல் கனவு என்றும், அவற்றின் பொருட்களை உள்நாட்டு சந்தையில் மட்டுமே விற்க முடியும் என்றும் தெரிவித்தார்.

ஜவுளித்துறையில் நிரந்தர தொழிலாளர்கள் இல்லை என்றும், எல்லா தொழிலாளர் சட்டமும் மீறப்படுகிறது என்றும் கூறிய அவர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு வரவில்லை என்றாலும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு வருவதாகவும் குறிப்பிட்டார். எனவே, ஜவுளித்துறையில் தொழிலாளர் பற்றாக்குறை பெரிய பிரச்சனையாக இல்லை என்றும், மாறாக தொழில்நுட்பமும் கட்டுப்பாடுகளும் தான் பெரிய பிரச்சனையாக இருப்பதாகவும் கூறினார்.



"விண்வெளி ஆராய்ச்சியிலும் அணு ஆயுதத்திலும் உலக நாடுகளுக்கு ஈடான தொழில்நுட்பத்தை நம் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கான தொழில்நுட்பத்தையும் நம் விஞ்ஞானிகளால் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இதற்கு அரசு முயற்சி எடுக்கவில்லை," என்று ப.சிதம்பரம் விமர்சித்தார். தொழில்நுட்பமும் அளவும் பெரும் தடைகளாக இருப்பதாகவும், இந்த தடைகளை நீக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...