கோவையில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பிய யூடியூபர் கைது

கோவையில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து பரப்பியதாக யூடியூபர் மருதாசலம் கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அவர் பேஸ்புக்கில் பதிவிட்டார்.


Coimbatore: கோவையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து பரப்பியதாக யூடியூபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

வெள்ளானைப்பட்டியை சேர்ந்த மருதாசலம் (48) என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர், கோவை பிரஸ் கிளப் உறுப்பினர்களாக உள்ள பத்திரிகையாளர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து மாதம்தோறும் பணம் பெற்று வருவதாகவும், அதற்கு பிரஸ் கிளப் தலைவராக இருந்த பாபு முக்கிய பங்கு வகித்து வந்ததாகவும் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

பாபு தவிர முன்னணி தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் கேமராமேன்களின் பெயர்களையும் குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து தன் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை மருதாசலம் பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசுக்கு இணைய வழியில் பாபு புகார் அளித்தார்.

விசாரித்த சைபர் கிரைம் போலீசார் மருதாசலத்தை நேற்று (அக்டோபர் 2) கைது செய்தனர். இந்த சம்பவம் கோவை ஊடக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...