கோவையில் மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி படிப்பிற்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை - ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ், Ph.D படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (அக்டோபர் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை மூலம் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தும் விதமாக முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை (Chief Minister Research Fellowship) திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் முழு நேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு (Ph.D) பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவியர்களுக்கு தலா ரூ.1,00,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த உதவித்தொகைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:

1. முழு நேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு (Ph.D) பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

2. வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை.

3. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் ஆராய்ச்சி படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும்.

4. ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையானது ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தவுடன் முழுவதுமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

1. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை

2. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID)

3. ஆதார் அட்டை நகல்

4. வங்கிக்கணக்கு புத்தக நகல்

5. ஆராய்ச்சி படிப்பிற்கான ஆய்வறிக்கை, வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரம்

6. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டதற்கான இருப்பிடச்சான்று (Nativity Certificate)

தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...