சிங்காநல்லூர் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு விழா: அமைச்சர் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை

கோவை சிங்காநல்லூரில் நாளை நடைபெறவுள்ள நகர்புற நலவாழ்வு மையத்தின் திறப்பு விழாவிற்கு வருகை தரவுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியனை வரவேற்க செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கிழக்கு மண்டல அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சிங்காநல்லூரில் அமைந்துள்ள நகர்புற நலவாழ்வு மையத்தின் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தர உள்ளார்.

இந்நிலையில், அமைச்சரை வரவேற்கும் பொருட்டு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து இன்று (03.10.2024) வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக், உதவி ஆணையாளர், உதவி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர், CHO மற்றும் ZSO ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், இக்கூட்டத்தில் திராவிட மணி, ராமகிருஷ்ணன் மற்றும் நகர் நல மையத்தின் மருத்துவர்களும் பங்கேற்றனர். திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதேவேளை, கிழக்கு மண்டலம், வார்டு எண் 59, கிருஷ்ணமா நாயக்கர் வீதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி நடைபெற்றது.



இப்பகுதி பொதுமக்களிடம் இருந்து கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக்கிற்கு புகார் வந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.



இதனையடுத்து, இன்று (03.10.2024) வியாழக்கிழமை அந்த மழைநீர் வடிகால் உடனடியாக தூய்மைப்படுத்தப்பட்டது. இச்சீரமைப்பு பணியால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...