கோவையில் பொதுமக்களுக்கான நடமாடும் R.O தண்ணீர் டிஸ்பென்சர் அறிமுகம்

கோவையில் முதல் முறையாக பொதுமக்களுக்கான மொபைல் டிராலி சைக்கிள் டிஸ்பென்சர் R.O வாட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை மலிவு விலையில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: கோவையில் முதல் முறையாக பொதுமக்களுக்கான மொபைல் டிராலி சைக்கிள் டிஸ்பென்சர் R.O வாட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கோவையின் அக்குவா கிளேன் மற்றும் ரேணுகா சைக்கிள் நிறுவனங்களுடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பூர்விகா மொபைல் ஷோரூம் அருகே அறிமுகப்படுத்தப்பட்டது. காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.உசேன் வகாப் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.

இது குறித்து கே.உசேன் வகாப் பேசுகையில், "தமிழ்நாட்டில் வாட்டர் பாக்கெட் தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து, பொதுமக்களின் தேவைக்காக இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். 250 மில்லி டம்ளரில் சுத்தரிக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்குகிறோம்," என்றார்.

இந்த திட்டத்தின் மூலம் வணிக பகுதி, மார்க்கெட் மற்றும் சாலையோர பகுதிகளில் பொதுமக்களுக்கு மலிவு விலையில் சுத்தமான குடிநீர் கிடைக்கும். மேலும், இது வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்று கே.உசேன் வகாப் தெரிவித்தார்.

இந்த திட்டம் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், காவல்துறையினர், கூலித்தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கே.உசேன் வகாப் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.உசேன் வகாப், அக்குவா கிளேன் உரிமையாளர் குருசாமி, ரேணுகா சைக்கிள் உரிமையாளர் லட்சுமணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...