தாராபுரம் அருகே ரூ.10.13 கோடி மதிப்பீட்டில் 20 வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.10.13 கோடி ஆகும்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ரூ.10.13 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் தலைமை வகித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



இந்த வளர்ச்சித் திட்டங்களில் பட்டத்திபாளையம் பகுதியில் ரூ.19 லட்சம், கருப்பன் வலசு பகுதியில் ரூ.30 லட்சம், மணலூர் பகுதியில் ரூ.2.97 கோடி, கந்தசாமிபாளையம் பகுதியில் ரூ.25 லட்சம், ஆயிகவுண்டன்பாளையம் ரூ.42 லட்சம், மாலமேடு பகுதியில் ரூ.39 லட்சம், லட்சுமி நகர் பகுதியில் ரூ.35 லட்சம், போளாரை பகுதியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.



இத்திட்டங்களில் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் திறப்பு விழா, ஆரம்ப துணை சுகாதார நிலையம் திறப்பு விழா, தார் சாலை அமைத்தல், பழுதடைந்த தார் சாலையை புதுப்பித்தல், பேருந்து நிறுத்தம் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், சிறுவர் பூங்கா அமைத்தல் ஆகியவை அடங்கும்.

இந்நிகழ்ச்சியில் மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக், மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவரும் மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளருமான பழனிச்சாமி, மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், கன்னிவாடி பேரூராட்சி தலைவர் ரேவதி சுரேஷ், மூலனூர் பேரூராட்சி தலைவரும் மூலனூர் பேரூர் கழக செயலாளருமான மக்கள் தண்டபாணி மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...