உடுமலை அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: திருமணத்திற்கு ஒரு மாதம் முன் இளைஞர் பரிதாப உயிரிழப்பு

உடுமலை அருகே கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் திருமணத்திற்கு ஒரு மாதம் முன் இளைஞர் உயிரிழந்தார். திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது நடந்த இந்த சோகச் சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் திருமணத்திற்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை அண்ணா குடியிருப்பைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சாமி என்கிற சிவராஜின் மகன் கோகுல்நாத், அந்தியூர் பகுதியில் காரில் சென்றபோது விபத்துக்குள்ளானார். கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, அருகிலிருந்த கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்தது.



சீட் பெல்ட் அணியாததால், கோகுல்நாத் காரின் கீழே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது. இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



விபத்து குறித்து கோமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கோகுல்நாத்தின் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...