கோவையில் திடீர் ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி

கோவையில் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதிகளில் திடீர் ஆலங்கட்டி மழை பெய்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த இம்மழை மக்களை மகிழ்வித்தது.



கோவை: கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் எதிர்பாராத விதமாக ஆலங்கட்டி மழை பெய்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த இந்த ஆலங்கட்டி மழை அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 3 முதல் 5 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோவையின் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.



பிற்பகல் 1:00 மணி முதல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.



இந்த எதிர்பாராத ஆலங்கட்டி மழை பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...