கோவையில் காவல் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்

கோவையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாநகர காவல் துறையின் கூட்டு முயற்சியில் காவல் துறை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கியது.


கோவை: கோவையில் காவல் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்ட இரண்டு நாள் பயிற்சி முகாமை காவல் துறைத் தலைவர் சங்கர் ஜிவால் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி வைத்தார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில், மாநகர காவல் துறையின் பங்களிப்புடன் கோவையில் உள்ள தனியார் அரங்கில் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி முகாமில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பெறப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள், அதிகார துஷ்பிரயோகம், காவல் பாதுகாப்பில் வன்முறை போன்ற குற்றச்சாட்டுகள், காவல் துறையினர் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய மனித உரிமைகள் மற்றும் அவற்றின் அவசியம், அது தொடர்பான சட்ட விளக்கங்கள், வழக்கு விவரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.



தொடக்க விழாவில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணைக்கான டைரக்டர் ஜெனரல் அஜய் பட்நாகர், திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமின் தேவைகள் மற்றும் நோக்கம் குறித்து விவரித்தார். இதையடுத்து, காவல் துறைத் தலைவர் சங்கர் ஜிவால், பயிற்சியில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான அறிவுரைகளை வழங்கினார். கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் பயிற்சி முகாமின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த பயிற்சி முகாமில் தமிழக தலைமையிட காவல் துறைத் தலைவர் (பொது) சாமுண்டீஸ்வரி, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார், கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் ஆகியோருடன் கர்நாடக மாநில காவல் துறை கூடுதல் இயக்குநர் தேவஜோதி ராய், கர்நாடக சிறைத் துறை அகாதெமி இயக்குநர் சேமசேகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 காவல் கண்காணிப்பாளர்கள், 37 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி. கண்ணதாசன், தேசிய மனித உரிமை ஆணைய பதிவாளர் ஜோகிந்தர் சிங், தேசிய மனித உரிமைகள் ஆணைய பொதுச் செயலாளர் பரத் லால், தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ராஜிவ் ஆகியோர் முகாமில் பங்கேற்றுள்ள காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள், அவை தொடர்பான சட்டங்கள், மனித உரிமை வழக்குகள் குறித்த விவரங்களை எடுத்துரைத்து, திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர்.

இந்தப் பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர்களாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் விக்ரம் ஹரி மோகன் மீனா, துணை காவல் கண்காணிப்பாளர் துஷ்யந்த் சிங் ஆகியோர் செயல்பட்டனர். இந்த முகாம் அக்டோபர் 4ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...