கோவை வெள்ளியங்கிரி மலை பகுதியில் அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம், பூண்டி அடுத்து மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை. மலையின் அடிவாரம் முதல் ஏழு மலைகளைக் கடந்து சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட ஆண்டுதோறும் பக்தர்கள் படையெடுத்து வருவர். மேலும், கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாகவும் வெள்ளியங்கிரி மலை உள்ளது.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) திருவாரூரைச் சேர்ந்த ஷ்யாம் (50) என்பவர் வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலையில் சென்றுகொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை (நேற்று) நள்ளிரவில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வனத்துறை சோதனை சாவடி அருகே அமர்ந்திருந்த வயதான ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஒரேநாளில் அடுத்தடுத்து உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆலாந்துறை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...