பொள்ளாச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: பிஏபி கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பிஏபி கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தினர். நெல் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், வட்டாட்சியர் பட்டு ராஜா, பிஏபி திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு திட்ட குழு தலைவர் செந்தில், முன்னோடி விவசாயிகள் பட்டீஸ்வரன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். திருமூர்த்தி அணை பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோரின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனைமலை பகுதிகளில் விரைவில் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும், நெல் கொள்முதலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், காட்டுப்பன்றிகளை தடுக்க வேண்டும், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும், அம்மை நோய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.



ஆனைமலை பழைய ஆயக்கட்டு காரப்பட்டி கால்வாய் பகுதிகளில் குடிநீர் திட்டங்களுக்காகவும், தனியார் திட்டங்களுக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லும்போது சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. கேரளாவில் உள்ளது போன்று தமிழக அரசும் நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா உறுதியளித்தார். குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு விவசாயி பத்மநாபன் சார்பாக நீரா பானம் இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...