கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியில் லாரியிலிருந்து விழுந்த இரும்பு உருளை: வாகனங்கள் சேதம்

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியில் லாரியிலிருந்து விழுந்த இரும்பு உருளை கார் மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.


Coimbatore: கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியில் இன்று (அக்டோபர் 4) அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. தனியார் நிறுவனத்திற்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு மிஷின் மெட்டீரியல் நடுரோட்டில் உருண்டு விழுந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

எல்.அண்ட்.டி நிறுவனத்திலிருந்து லேத் மெஷின் கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு முறைகளை சரியாக பின்பற்றாமல், பெரிய இரும்பு உருளையை இரண்டு பக்கமும் மரக்கட்டைகளால் மட்டுமே கட்டி லாரியில் ஏற்றியிருந்தனர்.

லாரி சென்றபோது, அதிக எடையை தாங்க முடியாமல் இரும்பு உருளை சரிந்து சாலையில் உருண்டு விழுந்தது. இதனால் அருகில் சென்ற கார் மற்றும் இருசக்கர வாகனம் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

சம்பவம் நடந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக செயல்பட்ட அதிகாரிகள், சாலையில் விழுந்த இரும்பு உருளையை அகற்றி போக்குவரத்தை சீராக்கினர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி ஓட்டுநர் மற்றும் நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, கனரக வாகனங்களில் பொருட்களை ஏற்றும்போது பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...