கோவையில் மிதமான மழை: குளிர்ச்சியான சூழலால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது. ஒன்றரை மாதங்களாக நிலவிய கடும் வெப்பத்திற்குப் பிறகு இந்த மழை பொதுமக்களுக்கு நிவாரணம் அளித்தது.



Coimbatore: கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் இன்று காலை மிதமான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் உருவாகியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என முன்னதாக அறிவித்திருந்தது.

கடந்த ஒன்றரை மாதங்களாக கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை புலியகுளம், உக்கடம், டவுன் ஹால், குனியமுத்தூர், பெரிய கடை வீதி, ராமநாதபுரம், கரும்புகடை, நஞ்சுண்டாபுரம், போத்தனூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.



திடீரென பெய்த இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவானது. பொதுமக்கள் குடை பிடித்தபடி தங்கள் அன்றாட பணிகளுக்குச் சென்றனர். சிறிது நேரம் பெய்த மழை பின்னர் நின்றுவிட்டது.

கடும் வெப்பத்திற்குப் பிறகு பெய்த இந்த மழை பொதுமக்களுக்கு பெரும் நிவாரணத்தை அளித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கோடை காலத்தின் வெப்பத்தை சமாளிக்க முடியும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...