உடுமலை அருகே போலி பெண் மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற கிராம சுகாதார செவிலியர் சுகுணா, உரிய கல்வித் தகுதி இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளித்ததாக ஒப்புக்கொண்டார். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புதுப்பாளையம் வீர காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுகுணா என்ற ஓய்வு பெற்ற கிராம சுகாதார செவிலியர், தனது வீட்டில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத் துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி அறையில், திருப்பூர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கண்ணன் மகாராஜன் முன்னிலையில் சுகுணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், உரிய கல்வித் தகுதி இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை சுகுணா ஒப்புக் கொண்டார்.



இந்நிலையில், நேற்று குடிமங்கலம் காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் சுகுணா மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால், உரிய தகுதி இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...