கோவை ரத்தினபுரியில் 8ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் மீது போக்சோ வழக்கு

கோவை ரத்தினபுரியில் 8ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவியும் 21 வயதான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞரும் கடந்த ஒரு மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

நேற்று (அக்டோபர் 4) மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் சந்தித்ததாகவும், அப்போது இளைஞன் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போது மாணவியின் பெற்றோர் திடீரென வந்ததால் இளைஞர் தப்பி ஓடி உள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கோவை காந்திபுரம், காட்டூரில் உள்ள மாநகர, மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அந்த இளைஞருடன் தங்கி இருந்த இருவரும் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து தப்பியோடிய இளைஞர் குறித்தான விவரங்களை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...