உடுமலை அதிமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல்

உடுமலை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக பிரமுகரின் மகன் கோகுல்நாத்தின் வீட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அந்தியூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக பிரமுகரின் மகனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல் கூறினார்.

உடுமலை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சாமி என்கிற சிவராஜின் மகன் கோகுல்நாத், கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி தனது திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்க பொள்ளாச்சி நோக்கி சொகுசு காரில் சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இந்நிலையில், இன்று உடுமலை மின் நகரில் உள்ள கோகுல்நாத்தின் இல்லத்திற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன், முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், எம்.எஸ். ஆனந்தன் மற்றும் உடுமலை நகர அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...