கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீஸ் திடீர் சோதனை

கோவை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். சில அறைகளில் போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம், சரவணம்பட்டி, அத்திப்பாளையம் பகுதிகளில் செயல்படும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் வாடகை வீடுகளில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையில் கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீஸ் குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டனர். கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா, விடுதிகளில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதே இந்த சோதனையின் நோக்கமாகும்.



விடுதிகளில் தங்க விரும்பாத மாணவர்கள் தனியாக வாடகை வீடுகளில் தங்கி வரும் நிலையில், அத்தகைய வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, மாணவர்கள் தங்கியிருக்கும் சில அறைகளில் உயர ரக போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர் விடுதிகளிலும் தொடர்ந்து இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...