உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் தென்னிந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் தென்னிந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படவுள்ளன.



கோவை: தமிழக துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் தென்னிந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.



மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் ஏற்பாடு செய்த இந்த பந்தயத்தை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட விதவிதமான மோட்டார் சைக்கிள் வீரர்கள் கலந்து கொண்டனர். 16 வகையான பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மண்புழுதியை கிளப்பியபடி சீறிப்பாய்ந்த மோட்டார் சைக்கிள்களைக் கண்டு பார்வையாளர்கள் வியந்தனர்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ரூபாய் 2.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன், சட்டத்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் அமுத பாரதி, நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...