உடுமலை அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி பெயர் கல்வெட்டில் புறக்கணிப்பு: முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு கண்டனம்

உடுமலையில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி பெயர் கல்வெட்டில் இடம்பெறாததால் சர்ச்சை. முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி பெயர் கல்வெட்டில் இடம்பெறாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம், தலைவர்கள் பூங்கா, நீரோட்டம் பூங்கா, அசோகா ஸ்தோபி சந்திப்பு ஆகியவை பராமரிக்கப்பட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் அமைச்சர் கயல்விழியின் பெயர் அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் இடம்பெறவில்லை. இது அமைச்சரின் ஆதரவாளர்களையும் திமுகவினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரம் உடுமலை, தாராபுரம், சென்னை போன்ற பல்வேறு இடங்களில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் சாதிக்பாட்ஷா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், "அரசு விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் பெயர், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் பத்மநாபன் பெயர் உள்ள நிலையில் தற்போதைய அமைச்சர் கயல்விழி பெயர் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

மேலும் அவர், "கல்வெட்டு திறப்பு விழாவின் போது அமைச்சர் சாமிநாதன் கவனிக்கவில்லையா? இல்லை முன்கூட்டியே கல்வெட்டு படம் காட்டவில்லையா? இல்லை அமைச்சருக்கு தெரிந்து தான் இந்த தவறு நடந்துள்ளதா என தெரியவில்லை. சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட திராவிட மாடல் திமுக இயக்கத்தில் ஒரு பட்டியலினை அமைச்சரின் பெயரை திட்டமிட்டு புறக்கணிப்பு செய்தது ஒட்டுமொத்த மக்களின் கோபத்தை கிளறி உள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சாதிக்பாட்ஷா வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...