உடுமலையில் கோவை மண்டல கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்க அலுவலகம் திறப்பு

உடுமலையில் கோவை மண்டல கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் (HMS) புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவில் தொழிலாளர் நல வாரிய அட்டைகள் வழங்கப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு கார்னர் பகுதியில் கோவை மண்டல கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்க உடுமலை பகுதி தொழிற்சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு மாநில அமைப்பு செயலாளர் மற்றும் சங்கத்தின் பொதுச் செயலாளரான மனோகரன் தலைமையில் நடைபெற்றது.



விழாவிற்கு முன்னதாக, பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜரின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மாநில செயலாளர் மனோகரன் உடுமலையில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார். தொழிற்சங்க கொடியினை HMS தொழிற்சங்க காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஏற்றி வைத்தார். உடுமலை நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கோ ரவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.



நிகழ்வில் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு ஆணை மற்றும் நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினரும் மாநில துணைத்தலைவருமான சேலம் கணேசன், மாநிலச் செயலாளர் ரமணி ஆகியோர் இந்த அட்டைகளை வழங்கினர்.

நிகழ்வில் காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியம், கோவை மண்டல கட்டுமான தொழிலாளர் சங்கம் செயல் தலைவர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. நலவாரியம் சர்வர் முறையாக பராமரிக்க வேண்டும்.

2. கட்டுமான அமைப்பு சார தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.7000 வழங்க வேண்டும்.

3. வீடு கட்ட மானியம் எளிய நடைமுறையில் அமல்படுத்த வேண்டும்.

4. ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

5. பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...