உடுமலை அருகே பூளவாடியில் மருந்து தெளித்ததால் கருகிய தக்காளி செடிகள்: விவசாயி வேதனை

உடுமலை அருகே பூளவாடியில், விவசாயி மாசிலாமணி தெளித்த மருந்தால் தக்காளி செடிகள் கருகின. விளைச்சலுக்கு தயாராய் இருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த சேதம், விவசாயியின் நெஞ்சில் இடியாய் இறங்கியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பகுதியில் விவசாயி மாசிலாமணி பயிரிட்டிருந்த தக்காளி செடிகள் நோய் தாக்குதலுக்கு உள்ளானதால், அவர் தெளித்த மருந்தால் கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி பெரும் அளவில் செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், விவசாயி மாசிலாமணியின் தக்காளி செடிகளில் லேசான நோய் தாக்குதல் ஏற்பட்டதால், அவர் உடுமலையிலுள்ள வேலன் என்ற தனியார் நிறுவனத்தில் மருந்து வாங்கி தெளித்தார்.



மருந்து தெளித்தால் தக்காளி செடிகள் நோய் நீங்கி சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கையில் இருந்த மாசிலாமணியின் எதிர்பார்ப்புக்கு மாறாக, மருந்து தெளித்த சில நாட்களிலேயே தக்காளி செடிகள் கருக ஆரம்பித்தன.



விளைச்சலுக்கு தயாராக இருந்த தக்காளிகள் வாடியதோடு, நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் தக்காளி சாகுபடியில் பெரும் நட்டமும் ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து வேளாண் அதிகாரிகள், தோட்டக்கலைத்துறையினர் மற்றும் மருந்து நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயி குற்றம்சாட்டியுள்ளார். உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பயிர் சாகுபடியில் விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையினர் உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மருந்து தெளிப்பால் தக்காளி செடிகள் கருகியதா என கண்டறிய வேளாண்மை துறை ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகளை அனுப்பி வைப்பதாகவும், அவர்கள் தரும் அறிக்கைகளை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...