உடுமலையில் முறைகேடாக செயல்படும் மதுபானக் கூடங்களில் விதிமீறி மது விற்பனை

உடுமலையில் அரசு மதுபானக் கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி இயங்கும் மதுபானக் கூடங்கள் விதிமீறி மது விற்பனை செய்கின்றன. பொதுமக்கள் அதிருப்தியுடன் போராட்டத்திற்கு தயாராகின்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளுக்கு அருகில் முறையான அனுமதியின்றி இயங்கும் மதுபானக் கூடங்கள் விதிமீறி மது விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அனுஷம் திரையரங்கம் பின்புறம், ராஜேந்திர ரோடு பூங்கா எதிரில், அர்பன் வங்கி எதிரில், தாராபுரம் ரோடு ஆகிய இடங்களில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு அருகிலேயே அனுமதியற்ற மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கூடங்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரையும் மது விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.



இதனால் காலை நேரங்களில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் உடுமலை காவல்துறை மற்றும் தாராபுரம் மதுவிலக்கு காவல்துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

காவல்துறையின் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...