காங்கிரஸ் கட்சி மாநாட்டில் குடிபோதையில் வந்த விவசாயி மீது தாக்குதல்

கோவை செஞ்சேரி புத்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆனைமலை நல்லாறு திட்ட கோரிக்கை மாநாட்டில் குடிபோதையில் வந்த விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரது சகோதரர் அவரைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் அருகே செஞ்சேரி புத்தூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆனைமலை நல்லாறு திட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் வி.எம்.சி. மனோகரன் தீர்மானங்களை வாசித்துக் கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருந்த ஒரு நபர் குறுக்கிட்டு தீர்மான நகலைக் கேட்டார். மனோகரன் அதை வழங்க மறுத்ததால், அந்த நபர் "ஆனைமலை நல்லாறு திட்டத்திற்காக உண்மையாகவே போராடினீர்களா? சத்தியம் செய்யுங்கள்!" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



கூட்டத்தில் இருந்த கட்சியினர் அந்த நபரை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு, திடீரென வந்த மற்றொரு நபர் குடிபோதையில் இருந்தவரைத் தாக்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குடிபோதையில் இருந்தவரை மீட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், குடிபோதையில் இருந்தவர் செஞ்சேரி புத்தூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற விவசாயி என்றும், அவர் எந்தக் கட்சியிலும் இல்லை என்றும் தெரியவந்தது. மேலும், அவரைத் தாக்கியது அவரது சகோதரர் என்பதும் தெரியவந்தது.

இச்சம்பவம் காரணமாக மாநாட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...