கோவையில் 'காட்மா' தொழிற்பேட்டை: அடுத்த வாரம் நிலம் ஒதுக்கீடு தொடக்கம்

கோவை கீரணத்தம் பகுதியில் 'காட்மா இன்டஸ்ரியல் பார்க் பப்ளிக் லிமிடெட்' வளாகத்தில் நிலம் ஒதுக்கீடு பணிகள் அடுத்த வாரம் தொடங்குகிறது. இத்திட்டம் கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோரின் கூட்டு முயற்சியாகும்.


Coimbatore: கோவை மாவட்டம் கீரணத்தம் பகுதியில் கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் குடிசை தொழில்முனைவோர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'காட்மா இன்டஸ்ரியல் பார்க் பப்ளிக் லிமிடெட்' வளாகத்தில் நிலம் ஒதுக்கீடு பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படுகிறது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் நகர்புற பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. நகர விரிவாக்கம், வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில், கோவையை தலைமையகமாக கொண்டு செயல்படும் 'காட்மா' தொழில் அமைப்பு சார்பில், கோவையில் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.

இது குறித்து 'காட்மா' தலைவர் சிவக்குமார் கூறுகையில், "எங்கள் தொழில் அமைப்பில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 5,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குடிசை தொழில் பிரிவை சேர்ந்தவர்கள். நகர விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க எங்கள் தொழில் அமைப்பு சார்பில், கோவையில் தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்யப்பட்டது," என்றார்.

'காட்மா இன்டஸ்ரியல் பார்க் பப்ளிக் லிமிடெட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொழிற்பேட்டை கோவை கீரணத்தம் பகுதியில் 2.19 ஏக்கரில் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 12 கோடி ஆகும். மொத்தம் 27 உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் 2 சென்ட் முதல் அதிகபட்சமாக 7 சென்ட் வரை நிலம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

"தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த வாரம் முதல் நிலம் கிரயம் செய்து பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் தொடங்க உள்ளோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்," என்று சிவக்குமார் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "கீரணத்தம் தொழிற்பேட்டை திட்டத்தை தொடர்ந்து அடுத்தகட்டமாக கோவில்பாளையம் மற்றும் அரசூர் பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைப்பது தொடர்பாக உறுப்பினர்களுடன் பேசி வருகிறோம். முதல் திட்டத்தை போல் அவ்விரு திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...