கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் வெளியேற்றம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.


Coimbatore: கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடித்து சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியது. தொடர்ந்து மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், பள்ளியின் நுழைவாயில், வளாகம், வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நுணுக்கமான சோதனை மேற்கொண்டனர்.



இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதால், பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டனர். இதனால் பள்ளியைச் சுற்றி பதற்றமான சூழ்நிலை நிலவியது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கோவையில் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு நட்சத்திர ஓட்டல்களுக்கும், அதற்கு முன்னர் ராமநாதபுரம் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் இதே போன்ற மிரட்டல்கள் வந்தன. ஆனால் அனைத்தும் பொய்யான மிரட்டல்களாகவே இருந்தன.

இதுவரை இத்தகைய மிரட்டல்களுக்கு யாரும் கைது செய்யப்படாததால், போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வரும் இத்தகைய மிரட்டல்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...