கோவையில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவையில் இரவு நேரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. கடும் வெயிலுக்குப் பிறகு பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Coimbatore: கோவையில் இரவு நேரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வெளுத்து வாங்கியது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது.

கோவையில் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், 100 அடி சாலை, சித்தாபுதூர், ராம் நகர், பாப்பநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், ஆவாரம்பாளையம், கணபதி ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது.



காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை நேரத்தில் கோவை மாநகர் பகுதியில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. இரவில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த ஒன்றரை மாதமாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், இப்போது பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...