மாநகராட்சி இணைப்பை எதிர்த்து சீராபாளையம் மக்கள் ஆட்சியரிடம் மனு!

சீராபாளையம் ஊராட்சியின் ஒரு பகுதியை மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மக்கள் கருத்து கேட்காமல் முடிவெடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர்.


Coimbatore: சீராபாளையம் ஊராட்சியின் ஒரு பகுதியை கோவை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்துள்ளனர்.

மதுக்கரை ஒன்றியம் சீராபாளையம் ஊராட்சியின் வார்டு எண் 1, 2, 3 ஆகிய பகுதிகளை மட்டும் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு குறித்து மக்களிடம் எந்தவித கருத்துக் கேட்பும் நடத்தப்படவில்லை என்று மக்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.



கடந்த அக்டோபர் 2, 2024 அன்று நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் இந்த இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரியதாகவும், அந்த தீர்மானத்தின் நகலை மனுவுடன் இணைத்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரசின் அனைத்து திட்டங்களையும் பெற தங்கள் பகுதி கிராம பஞ்சாயத்தாகவே தொடர வேண்டும் என்றும், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டாம் என்றும் மக்கள் தங்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து மக்களிடம் நேரடியாக கருத்து கேட்டு, மக்களின் விருப்பத்தின் பேரிலேயே முடிவு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...