கோவையில் வாலிபர் மீது பீர் பாட்டில் தாக்குதல்; குட்கா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

கோவை புலியகுளத்தில் வாலிபர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், மரக்கடை மில் ரோடு மற்றும் சாய்பாபா காலனி பகுதிகளில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை புலியகுளத்தில் நடுரோட்டில் வாலிபர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், மரக்கடை மில் ரோடு மற்றும் சாய்பாபா காலனி பகுதிகளில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புலியகுளம், போலீஸ் கந்தசாமி வீதியைச் சேர்ந்த பாஸ்கரின் மகன் விஜய் (25) நேற்று அக்டோபர் 6 அன்று புலியகுளத்தில் உள்ள திமுக கட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புலியகுளம், சிறு காளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஜாக்கி என்ற பிரதீப் குமார் (24) மற்றும் கருப்பராயன் அம்மன் குளத்தைச் சேர்ந்த உதய விக்ரம் (22) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஜாக்கி என்ற பிரதீப் குமார் மற்றும் உதய விக்ரம் ஆகியோர் பீர் பாட்டிலை உடைத்து விஜய் மீது தாக்கினார்கள். இதில் விஜய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜாக்கி என்ற பிரதீப் குமார் மற்றும் உதய விக்ரம் ஆகியோரை கைது செய்தனர்.

கோவை மரக்கடை மில் ரோடு பகுதியில் ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மில் ரோட்டைச் சேர்ந்த ரபீக் (54) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா காலனி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எம்ஜிஆர் மார்க்கெட் முன் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ரத்தினபுரி, பழனியப்ப கவுண்டர் வீதியைச் சேர்ந்த சத்யேந்திரன் (43), சபரிநாதன் (22), இடையர் வீதி நாராயணன் லால் (41) மற்றும் செட்டி வீதி ஜோசப் (60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4.5 கிலோ குட்கா மற்றும் ரூ.27,020 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...