கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை பணிகள் தொடக்கம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் நாயக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் PRG அருண்குமார் MLA முன்னிலையில் தொடங்கியது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாயக்கம்பாளையம் ஊராட்சியில் இரண்டு இடங்களில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.



முதல் திட்டத்தின் கீழ், சபரி நகர் முருகன் வீடு முதல் ரங்கசாமி வீடு வரை மற்றும் திரிங்கா நகர் ரங்கராஜ் வீடு முதல் தினகரன் வீடு வரை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும். இரண்டாவது திட்டத்தின் கீழ், பாலமலை மெயின் ரோடிலிருந்து அசோகன் வீடு வரையில் ஒன்றிய குழு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும்.



இந்த இரண்டு திட்டங்களுக்கும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான PRG அருண்குமார் MLA அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் துரைசாமி, யூனியன் கவுன்சிலர் நர்மதா துரைசாமி, கழக செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த சாலை திட்டங்கள் நிறைவடைந்தால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...